கண்ணியார் களி கலை விழா இரு நாட்கள் நடன நிகழ்ச்சி
பாலக்காடு, ;பாலக்காடு அருகே, 'கண்ணியார் களி' நடன நிகழ்ச்சி, நாளை துவங்கி, இரு நாட்கள் நடக்கிறது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் தனித்துவமான கோவில் கலையாக, 'கண்ணியார் களி' நடனம் உள்ளது. ஆண்கள் மட்டும் குழுக்களாக சேர்ந்து ஆடும் இந்த நடனம், 700 ஆண்டு பழமை வாய்ந்தது.இந்த நடனத்தை ஊக்குவிப்பதற்காக, கேரள 'கண்ணியார் களி' கலை வளர்ச்சி கவுன்சில் கடந்த, 29 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த கவுன்சில் சார்பில், நாளை, 16ம் தேதியும், நாளை மறுநாள், 17 தேதியும், 'களிமுற்றம் 2024' என்ற பெயரில், 'கண்ணியார்களி' நடன நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, மாலை, 5:00 மணிக்கு பல்லச்சேனை புத்தன்க்காவு வேட்டைக்கொருமகன் கோவில் வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை, கலை அமைப்பான 'ஸ்வரலயா'வின் செயலாளர் அஜயன் துவக்கி வைக்கிறார்.கேரள கண்ணியார்களி கலை வளர்ச்சி கவுன்சில் பணித் தலைவர் முரளீதரன் தலைமை வகிக்கிறார். பிரபல எழுத்தாளர் ஆஷா மேனன் சிறப்புரையாற்றுகிறார்.தொடர்ந்து, 30 குழுக்கள் கலந்துகொள்ளும் 'கண்ணியார்களி' நடன நிகழ்ச்சி நடக்கிறது. இத்தகவலை, கவுன்சில் தலைவர் சபரி பிரகாஷ், செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் முரளீதரன் ஆகியோர் தெரிவித்தார்.