உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்

 கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்

ஊட்டி: ஊட்டி அண்ணா கலையரங்கில், 'குயின் ஆப் ஹில்ஸ் டிரஸ்ட் கராத்தே' சங்கம் சார்பில், 16வது கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் தனிநபர் கட்டா, தனிநபர், குமுத்தே (சண்டை பிரிவு), குழு கட்டா என மூன்று குழுவின், 30 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக, டி.எஸ்.பி., நவீன்குமார் பங்கேற்றார். நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமையாசிரியை ஜான்சி ரீட்டா டோனி வெற்றி பெற்ற, 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஜன., 4ல் சென்னையில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ சங்கம் நடத்தும், 43வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். ஏற்பாடுகளை சங்கம் தலைவர் இணையத்துல்லா, செயலாளர் ரென்சி பழனிவேல், துணை தலைவர்கள் அருண்குமார், பசுவையா, பொருளாளர் லிங்கராஜ் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை