| ADDED : நவ 19, 2025 04:12 AM
ஊட்டி: ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில், 28 வது மாவட்ட அளவிலான கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், மஞ்சூர் உட்பட வெளி மாவட்டம், வெளி மாநிலங்களை சேர்ந்த, 157 பெண் போட்டியாளர்கள் உட்பட, 408 கராத்தே போட்டியாளர்கள் பங்கேற்றனர். 5 வயது முதல், 30 வயது பெண்கள், ஆண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது. போட்டியில், குமுத்தே பிரிவில் ஆண்களுக்கான நேரடி சண்டை போட்டியில் தரஷித் திறன்குமார், கராத்தே சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பிரிவில் நேரடி சண்டை போட்டியில் ஹரிபிரியா ஜான், தர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர். தவிர, பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர். பரிசளிப்பு நிகழ்ச்சியில், வக்கீல் செல்வராஜ் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மாவட்ட செயலாளர் ஜோசப் பாக்கிய செல்வம், பொருளாளர் ராமகிருஷ்ணன், பால் விக்ரமன், தேவராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.