உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கட்டபெட்டு பஜார் சாலை பார்க்கிங் செய்வதில் சிக்கல்

கட்டபெட்டு பஜார் சாலை பார்க்கிங் செய்வதில் சிக்கல்

கோத்தகிரி';கோத்தகிரி கட்டபெட்டு பஜார் சாலையில் 'பேரிகார்ட்' வைக்கப்பட்டதால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் அதிகரித்துள்ளது.கோத்தகிரி- ஊட்டி இடையே, கட்டபெட்டு பஜார் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி, நடுஹட்டி, கக்குச்சி மற்றும் ஜெகதளா ஊராட்சிகளின் எல்லையாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இவ்வழியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.குடியிருப்புகள், கடைகள், தனியார் வணிக வளாகங்கள், வங்கிகள், தபால் அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் தனியார் கிளினிக்குகள் அமைந்துள்ளால், தங்களது அன்றாட தேவைகளுக்காக வரும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.தவிர, மினி பஸ்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட தனியார் வாடகை வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பஜாரில் இருந்து, கக்குச்சி, தும்மனட்டி மார்க்கத்தில் இயக்கப்படும் வாகனங்கள் அன்றாட நெரிசலில் சிக்குவது வழக்கம்.இந்நிலையில், காவல்துறை சார்பில், ஒரு பக்கத்தில் பேரிகார்டு அமைத்து கயிற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.இதனால், தனியார் வாகனங்கள் சாலையில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வாகன நெரிசல் ஏற்படுகிறது.எனவே, பேரி கார்டை கடைகளுக்கு ஒட்டியவாறு அமைக்கும் பட்சத்தில், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் கிடைப்பதுடன், நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி