உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனப்பகுதியில் மாணவர்களை அழைத்து செல்லும் டிரைவருக்கு கவுரவம்

வனப்பகுதியில் மாணவர்களை அழைத்து செல்லும் டிரைவருக்கு கவுரவம்

பந்தலுார்:வனப்பகுதி வழியாக மாணவர்களை பாதுகாப்புடன் அழைத்து வரும் டிரைவருக்கு மாணவர்கள் கவுரவம் அளித்து மகிழ்ந்தனர். கூடலுார் கல்வி மாவட்டத்தில், பெரும்பாலான மாணவர்கள் வனப்பகுதியை கடந்து பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அரசு வாகன வசதி இல்லாத பகுதிகளில், அரசு மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர, வாகன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது வரை, மாவட்டம் முழுவதும், 5,200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வனப்பகுதி வழியாக சென்று வர, போக்குவரத்து வசதி மற்றும் வழி துணையாளர் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.அதில், கூடலுார் கல்வி மாவட்டத்தில் மட்டும், 3,004 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், பந்தலுார் அருகே பென்னை வனப்பகுதியில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர, ஆட்டோ டிரைவர் வினோத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மாணவர்களை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்து வந்து, பாதுகாப்புடன் வீடுகளில் விடுவது பெற்றோர் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது. அவருக்கு, பழங்குடியின மாணவர்கள்; பெற்ேறார், இணைந்து பாராட்டு விழா நடத்தி கவுரவித்தனர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்து, வாழ்த்தி பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி, பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணன், தன்னார்வலர்கள் ஷெரீன்,கோபிகா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை