மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில், வரத்து அதிகரித்த நிலையில் உரிய விலை கிடைக்கவில்லை.குன்னுார் தேயிலை ஏல மையத்தில், நடப்பாண்டின், 6வது தேயிலை ஏலம் நடந்தது.'12.91 லட்சம் கிலோ இலை ரகம்; 3.04 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என மொத்தம் 15.95 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. '11.16 லட்சம் கிலோ இலை ரகம்; 2.69 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 13.85 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனையானது. கடந்த, 5வது ஏலத்தை விட, 6 சதவீதம் கூடுதலாக விற்று, 86.84 சதவீதமாக விற்பனையளவு இருந்தது. 12.76 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலையாக கிலோவிற்கு, 92.19 ரூபாய் கிடைத்து. அதில், டஸ்ட் ரகம் சராசரி விலை 97.48; இலை ரகம், 90.92 ரூபாய் எனவும் இருந்தது.பொதுவாக ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் பனி பொழிவின் தாக்கம் அதிகம் இருக்கும் போது, பிப்; மார்ச் மாத ஏலங்களில் வரத்து பெருமளவில் குறையும். எனினும், இந்த தேயிலைக்கு மார்கெட்டில் நல்ல விலை இருக்கும். கடந்த ஆண்டு பிப்., மாதம் நடந்த, 6வது ஏலத்தில் சராசரி விலை கிலோவுக்கு, 116 ரூபாய் இருந்தது; குறிப்பிட்ட சில டஸ்ட் ரகங்கள் கிலோவுக்கு, 126 ரூபாய்வரை கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக மகசூல் அதிகரித்தது. உரிய விலை கிடைக்கவில்லை.
03-Oct-2025