மேலும் செய்திகள்
நரிக்குடி ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை வருமா
20-Oct-2025
கோத்தகிரி: கோத்தகிரி, குன்னூர் மற்றும் ஊட்டி பகுதியில் இருந்து, கட்டபெட்டு வழியாக, கக்குச்சி, தும்மனட்டி உட்பட, பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, பள்ளி வாகனங்கள் உட்பட, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக சென்று வருகின்றன. கனமழையில், கட்ட பெட்டு அருகே, மண்சரிவு ஏற்பட்டு, சீரமைப்பு பணி நடைபெறாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடத்தில், எதிரில் வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது.போக்குவரத்து நிறைந்த சாலையில் விழுந்த மண் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
20-Oct-2025