உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் :வனத்துறையினர் ஆய்வு

கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் :வனத்துறையினர் ஆய்வு

பந்தலுார்: பந்தலுார் பஜார் பகுதியை ஒட்டி செம்மண்வயல் கிராமம் உள்ளது. கிராமத்தை சுற்றிலும் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. குடியிருப்புகள் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் அதிக அளவு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கிராமத்தை ஒட்டிய தேயிலை தோட்டத்தில், பாறைகள் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருப்பதை இப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் இப்பகுதியில், நேரில் ஆய்வு மேற்கொண்டு சிறுத்தைகளின் கால் தடங்களை ஆய்வு செய்தனர். வனச்சரகர் சஞ்சீவி கூறுகையில், ''இந்த பகுதிகள் அதிக அளவில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதி யில் வனக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் முன்னெச் சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி