உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தை நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

சிறுத்தை நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

கோத்ததிரி : கோத்தகிரி பகுதியில், சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக சிறுத்தை, கரடிமற்றும் காட்டெருமைகள்குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது தொடர்கிறது.இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று முன்தினம் இரவு, தும்மனட்டி கிராம குடியிருப்புகளில், சிறுத்தையின் நடமாட்டம் இருந்துள்ளது. இதனால், பீதி அடைந்த மக்கள் வெளியே வராமல், வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தின் பதிவு, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தோட்ட பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து முதுமலையில் விட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ