உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் நடமாடும் கால்நடைகள்; போக்குவரத்துக்கு இடையூறு

சாலையில் நடமாடும் கால்நடைகள்; போக்குவரத்துக்கு இடையூறு

கோத்தகிரி; கோத்தகிரி நகர சாலைகளில் நடமாடும் கால்நடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் மற்றும் மார்க்கெட் உட்பட, முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. பள்ளி மாணவ மாணவியர் உட்பட, மக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.சமீப காலமாக, நகர சாலைகளில் கால்நடைகள் உலா வருவது தொடர்கிறது. பெரும்பாலான நேரங்களில், ஒரே இடத்தில் கால்நடைகள் நின்று விடுவதால், போக்குவரத்துக்கும், மக்கள் சாலையை கடப்பதற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில், வாகனங்கள் சென்று வரும்போது கால்நடைகளை உரசி செல்வதால், காயம் அடைவதுடன், இருசக்கர வாகனங்களில் வந்து செல்வேர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.எனவே, பேரூராட்சி நிர்வாகம், கால்நடைகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை