உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பில்லாத கழிப்பிடங்களுக்கு பூட்டு கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அவலம்

பராமரிப்பில்லாத கழிப்பிடங்களுக்கு பூட்டு கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அவலம்

ஊட்டி:ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் கழிப்பிடங்களுக்கு பூட்டு போட்டு மூடப்பட்டதால் இங்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு கல்வி துறை, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களின் பல்வேறு தேவைகளுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு துறை அலுவலக கட்டடத்தில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பயன்படுத்த கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல கழிப்பிடங்களில் தண்ணீர் வசதியின்றி பயன்படுத்த முடியாத அவலநிலையில் உள்ளன. இதனால், கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான கழிப்பிடங்கள் இழுத்து மூடி பூட்டு போடப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் துவங்கி உள்ள நிலையில், பல கூட்டங்கள் இங்கு நடக்க உள்ளது. இந்நிலையில், கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள்; அரசியவாதிகள்; மக்கள் பாதிக்கப்படும் அவலம் ஏற்படும். எனவே, இங்குள்ள கழிப்பிடங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்