உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / டீசல் இல்லாமல் நின்ற லாரி; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

டீசல் இல்லாமல் நின்ற லாரி; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

பந்தலுார் : பந்தலுார் அருகே பொன்னானி பகுதியில், டீசல் இல்லாமல் நின்ற லாரியால் இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளா மாநிலத்திலிருந்து சிமென்ட், செங்கல் ஏற்றிய லாரி குந்தலாடி பகுதியை நோக்கி சென்றது. அப்போது, பொன்னானி பகுதி சாலையில் சென்றபோது, லாரியில் டீசல் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல், கேரளா மாநிலம் செல்லும், பயணிகள் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து தமிழக பகுதிக்கு வந்த பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டனர்.இரண்டு மணி நேரத்துக்கு பின்னர் லாரி ஓட்டுனர், டீசல் வாங்கி வந்த பின்னர் லாரி சென்றதால் போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி