உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கம்மாத்தியில் வயல் மற்றும் காரை சேதப்படுத்திய மக்னா

 கம்மாத்தியில் வயல் மற்றும் காரை சேதப்படுத்திய மக்னா

கூடலுார்: கூடலூர் அருகே கம்மாத்தி பகுதியில், உலா வந்த மக்னா நெல் வயலை சேதப்படுத்தியதுடன், காரையும் சேதப்படுத்தியது. கூடலுார் அருகே கம்மாத்தி பகுதியில் மக்னா யானை ஒன்று தொடர்ச்சியாக முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன், நெல் வயல் வெளிகளை சேதப்படுத்தி வருகிறது. இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் இந்த யானை, சாலைகளில் உலா வருவதால் மக்கள், அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை தொடர்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கம்மாத்தி பிரசாந்த் என்பவரது வயலுக்கு வந்த யானை, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் கதிர்களை, மிதித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஸ்ரீமதுரை அருகே அறக்கடவு என்ற இடத்தில் நிறுத்தி இருந்த காரையும் சேதப்படுத்தியது. இதனால், மக்கள் தங்கள் வாகனங்களை வீட்டுக்கு முன் நிறுத்த அச்சம் அடைந்து உள்ளனர். மக்கள் கூறுகையில், 'குடியிருப்பு பகுதிக்கு அடிக்கடி வரும் இந்த மக்னா யானையை அடர்த்தியான வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்