மேலும் செய்திகள்
சேதமான நடைபாதை மக்கள் நடந்து செல்ல சிரமம்
5 minutes ago
கூடலுார்: கூடலுார் நம்பலாக்கோட்டை சிவன் மலையில் ஏற்றப்பட்ட மகா கார்த்திகை தீபத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கூடலுார் நம்பாலக்கோட்டை சிவன்மலை சிவன் கோவிலில் மகா கார்த்திகை தீபம் திருவிழா நேற்று, காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு துவங்கிய கிரிவலம் ஊர்வலத்தில், பக்தர்கள் 'ஓம் நமச்சிவாயா' என, உச்சரித்தபடி கோவில் மலையை சுற்றி வந்தனர். ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. மாலை 6:00 மணிக்கு சிவன்மலை வளர்ச்சி சமூக நல அறக்கட்டளை தலைவர் கேசவன் மகா தீபத்தை ஏற்றினர். பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி குழு சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
5 minutes ago