உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பராமரிப்பு பணி நிறைவு; சூழல் சுற்றுலா மையம் திறப்பு

பராமரிப்பு பணி நிறைவு; சூழல் சுற்றுலா மையம் திறப்பு

ஊட்டி; ஊட்டி 'சூட்டிங் மட்டம்' பகுதியில் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்ட சூழல் சுற்றுலா மையம் திறக்கப்பட்டது. ஊட்டி- கூடலுார் சாலையில், 9வது மைல் பகுதியில் சூட்டிங் மட்டம் பகுதி உள்ளது. இப்பகுதியில், தோடர் பழங்குடியினர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில், வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தோடர் பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையமும் செயல்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இப்பகுதியை பார்வையிடுகின்றனர். இந்நிலையில், வனத்துறை சார்பில் பரா மரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக சூழல் சுற்றுலா மையம் மூடப் பட்டது. தற்போது, பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து, மீண்டும் சூழல் சுற்றுலா மையம் திறக்கப்பட்டது. கடுங்குளிர் நிலவினாலும் சூட்டிங் மட்டம் சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ