உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழங்குடியினர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்; ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பழங்குடியினர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்; ரூ.49 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

மஞ்சூர்; மஞ்சூர் பழங்குடியினர் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 59 பயனாளிகளுக்கு 49.25 லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மஞ்சூர் அருகே குந்தா கோத்தகிரி பழங்குடியினர் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசுகையில்,''மாநில அரசு பொது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் முகாமின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்களை தகுதி வாய்ந்தவர்கள் பெற்று பயன் பெற வேண்டும்,'' என்றார்.

ரூ.49.25 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சியில், சுய உதவி குழு கடனுதவியாக, 2 பேருக்கு 25 லட்சம் ரூபாய்; மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கூட்டுப்பொறுப்பு குழு கடன், 20 பேருக்கு, 12 லட்சம் ரூபாய்; கல்வி கடனாக, 3 பேருக்கு, 8.50 லட்சம் ரூபாய்; தோட்டக்கலைத் துறை சார்பில், 5 பேருக்கு 94 ஆயிரம் ரூபாய்க்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், 10 பேருக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்து மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், 14 பேருக்கு 2.30 லட்சம் ரூபாய் என , பல்வேறு திட்டத்தின் கீழ், 59 பயனாளிகளுக்கு, 49.25 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ், மகளிர் திட்ட அலுவலர் காசிநாதன்,தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, குந்தா தாசில்தார் சுமதி உட்பட பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை