உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்

குன்னுாரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்

குன்னுார்,; குன்னுார் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் கே.ஜி., மருத்துவமனை சார்பில், கிளிமஞ்சாரோ அரங்கில், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான, பொது மருத்துவ முகாம் நடந்தது.முகாமை ஓய்வு பெற்ற ஜெனரல் கிரீஷ் துவக்கி வைத்து பேசுகையில்,''கே.ஜி., மருத்துவமனையின் சிறந்த மருத்துவ முகாம் சேவையில், பங்களிப்பை வழங்கும் டாக்டர் குழுவினரின் கவனிப்பு மற்றும் மரியாதைக்கு ராணுவத்தினர் கடமைபட்டுள்ளனர். வயதாகும்போது, சளி, காய்ச்சலை வீட்டில் உள்ளவர்களே தீர்த்துவிடலாம். ஆனால், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை மீட்டெடுக்க இந்த சேவை உதவுகிறது. இதுபோன்ற தகுதி வாய்ந்த, திறமையான மருத்துவ நிபுணர்கள் குழுவினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கும் சேவைக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்,'' என்றார்.மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்துதாஸ் உட்பட ராணுவ அதிகாரிகள் முகாமை பார்வையிட்டனர். அதில், இதயம், கண், காது, மூக்கு, உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சைகள் அளித்து, மருந்துகள் வழங்கப்பட்டன. 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை