மேலும் செய்திகள்
குறைகேட்பு முகாம்
16-Jun-2025
கோத்தகிரி; கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன.கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, தாந்தநாடு கிராமத்தில் முகாம் நடந்தது. நகராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் இருந்து, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில், 'மகளிர் உரிமைத்தொகை, ரேஷன் கார்டில் பெயர்சேர்த்தல், திருமண உதவித்திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மறுமண ஊக்குவிப்பு திட்டம், ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவி திட்டம், காப்பீடு,' உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் வழங்கி தீர்வு கண்டனர். மேலும், முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
16-Jun-2025