உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பஸ்; கூடலுார் ஆட்டோ ஓட்டுனர்கள் புகார்

அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பஸ்; கூடலுார் ஆட்டோ ஓட்டுனர்கள் புகார்

கூடலுார்; கூடலுார் பாலம்வயல் இடையே இயக்கப்படும் மினிபஸ், அனுமதியின்றி தேவர்சோலைக்கு இயக்கப்பட்டதால், ஆட்டோ ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுாரில் இருந்து பாலம்வயல் இடையே மினிபஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பஸ் நேற்று பாலம்வயலிருந்து தேவர்சோலைக்கு இயக்கப்பட்டது. 'பாலம்வயல் -தேவர்சோலை இடையே, மினி பஸ் இயக்க அனுமதி இல்லை,' என, கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள், தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷன் சென்று, 'பாலம்வயல் - தேவர்சோலை இடையே, அனுமதி இன்றி மினிபஸ் இயக்க துவங்கி உள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனை தடுத்து நிறுத்த வேண்டும்,' என, புகார் அளித்தனர். தொடர்ந்து, 'இவ்வழிதடத்தில், அனுமதி இன்றி, மினி பஸ் இயக்கக் கூடாது. மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும்,' என, மினிபஸ் ஊழியர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். ஓட்டுனர்கள் கூறுகையில்,'அனுமதி இல்லாத, இவ்வழித்தடத்தில் மினி பஸ் இயக்கினால், எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, அனுமதி இல்லாத வழிதடத்தில் மினிபஸ், இயக்குவதை தடுக்க வேண்டும்,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ