உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி கொடுமாண்ட மூர்க்கான்குழி பகுதியை சேர்ந்த அபுல் ஹக்கீம் மகன் சாத், 8. பள்ளிப்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். இவர், தனது சகோதரன் சஹல் உடன், கொப்பம் பைலிப்புறத்தில் உள்ள தாயாரின் வீட்டிற்கு சென்றான். கடந்த 26ம் தேதி மாலை குடும்பத்தினருடன் காளியார்வெட்டம் பகுதியிலுள்ள துாதப்புழா ஆற்றில் குளித்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சகோதரர்கள் இருவரும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த பொதுமக்கள், சஹலை உயிருடன் மீட்டனர். ஆனால், சாத் ஆற்று நீரில் மூழ்கி மாயமானான். போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். நேற்று காலை, மலப்புரம் மாவட்டம் பொன்னானி கைலாசம்களம் படகுத்துறை அருகே சிறுவன் உடல் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பொன்னானி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை