உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மோட்டார் பைக் திருடியவர் பிடிபட்டார்

மோட்டார் பைக் திருடியவர் பிடிபட்டார்

குன்னத்தூரில் பைக் திருடியவர் கைது செய்யப்பட்டார்.குன்னத்தூர், ராயல் கேசில் குடியிருப்பை சேர்ந்தவர் சேகர். இவர் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் பைக் கடந்த டிச. 12ம் தேதி திருட்டு போனது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.தீவிர தேடுதல் வேட்டையில், சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்த நடராஜ பெருமாள், 24. என்பவர் பைக்கை திருடியது தெரிய வந்தது. அன்னூர் போலீசார் அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை பறிமுதல் செய்தனர். போலீசார், நடராஜ பெருமாளை கைது செய்து, அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை