உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய பெண் குழந்தைகள் தினம்

தேசிய பெண் குழந்தைகள் தினம்

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, முதலமைச்சரின் வாழ்த்து மடலை கல்லூரி மாணவியர்களுக்கு கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.நிகழ்ச்சியில், கலெக்டர் கிராந்தி குமார் பேசுகையில், பெண்கள் மேம்பாட்டுக்காக, தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு பெண் குழந்தையும், கட்டாயம் பள்ளி கல்வியை முடிக்க வேண்டும். தொடர்ந்து, உயர்கல்வி பெற்று, பொருளாதார சுதந்திரம் அடையும் விதமாக வேலை வாய்ப்பினை பெற வேண்டும். மற்ற மாவட்டங்களை விட, கோவை மாவட்டத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. அரசின் சார்பில், பல்வேறு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. கல்லூரி மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் லட்சுமணசாமி, வேதியியல் துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணவேணி, ஆராய்ச்சி பிரிவு முதல்வர் பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை