உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நிழற்குடை வேண்டும்

நிழற்குடை வேண்டும்

ஊட்டி: ‘ஊட்டி தலைகுந்தா பகுதியில் பயணியர் நிழற் குடைஅமைக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி அருகே உள்ள தலைகுந்தா பகுதி, தமிழகம், கர்நாடகா, கேரளம் மாநிலங்களின் சந்திப்பு பகுதியாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு வாகனங்கள் நிற்கும் பகுதியில் நிழற்குடை இல்லாததால், மழை, வெயில் நாட்களில் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை