உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 25 ஆயிரம் உயர் ரக மலர்கள் நடவு செய்ய திட்டம் நேரு பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

25 ஆயிரம் உயர் ரக மலர்கள் நடவு செய்ய திட்டம் நேரு பூங்காவில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

கோத்தகிரி;கோத்தகிரி நேரு பூங்காவை சீசனுக்காக தயார்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆண்டுதோறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பூங்காவை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. நுழைவு வாயில், ரோஜா மேடை நடைபாதை, சிறுவர் பூங்கா ஆகியவை, நேர்த்தியாக புனரமைக்கப்பட்டுள்ளதால், பூங்கா, பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த நிலையில், பூங்கா புல் தரை வளர்ந்து காணப்படுகிறது. வரும் மே மாதம் நடைபெறும் சீசனுக்காக, தற்போது புல்தரை நேர்த்தியாக வெட்டப்பட்டு, மண் கொட்டி சமன் செய்தும், மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏதுவாக, பாத்திகள் தயார் செய்யப்பட்டு, மலர் விதைகள் விதைக்கப்பட உள்ளது. இப்பணிகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். பனிக்காலத்தில் பாதிப்பு இல்லாமல், கோடை சீசனுக்கு மலர்கள் பூத்து குலுங்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பிப்., முதல் வாரத்தில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான உயர்ரக மலர் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி