உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்

 ஊட்டி மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள்

குன்னுார்: ஊட்டி மலை ரயில் சேவைக்காக புதிதாக தயாரிக்கப்பட்ட, 4 பெட்டிகள் 3 ஆண்டுகளுக்கு பிறகு பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று குன்னுாருக்கு கொண்டு வரப்பட்டன. குன்னுார்-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், கடந்த, 2015ல் தென்னக ரயில்வே அமைச்சக அறிவுரைப்படி, ஐ.சி.எப்., தொழிற்சாலையில் மலை ரயிலுக்கான, புதிய பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கி, 27 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 2019ல் முதல் 4 பெட்டிகள் சோதனை ஓட்டம் நடத்திய போதும் மலை சரிவுகளில் நடத்தவில்லை என ரயில்வே மீது, இந்திய தணிக்கை மற்றும் கணக்காளர் அலுவலகம் ( சி.ஏ ஐ.) அறிக்கை வெளியிட்டது. ரூ. 27.91 கோடி இழப்பு இதன் அடிப்படையில், 2020ல் புதிய பெட்டிகள் ஒவ்வொன்றும், 5 டன் எடை அதிகம் இருப்பதை சுட்டிகாட்டியும், 15 பெட்டிகள் ரயில்வே வாரிய அனுமதியில்லாமல் வாரந்திர சிறப்பு ரயில்களுக்கு பயன்படுத்தியதும், மற்ற பெட்டிகள், 3 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயன்படுத்தாமல் இருந்ததும் தெரிய வந்தது. இத்திட்டத்தில் 27. 91 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதால், முன்மாதிரி பெட்டிகளை தயாரிக்க வலுவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலை அமைப்பு ஆலோசனையின் பேரில், சோதனை ஓட்டத்திற்கு பிறகே துவங்க வேண்டும் எனவும் சி.ஏ.ஐ., அறிவுறுத்தியது. இதன் பேரில் மலை பாதையில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, புதிய பெட்டிகள் பராமரிப்பு பணிகளுக்கு கொண்டு சென்று பணிகள் நிறைவு பெற்றது. நேற்று இதன் சோதனை ஓட்டம் நடத்தி நான்கு பெட்டிகள் குன்னுார் கொண்டுவரப்பட்டது. இங்கு ஏற்கனவே பயன்படுத்திய நான்கு பெட்டிகள் திருச்சி பொன்மலைக்கு விரைவில் கொண்டு செல்லப்பட உள்ளது. தொடர்ந்து, மலைரயில் இனி புதிய பெட்டிகளுடன் ஓடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி