உள்ளூர் செய்திகள்

தொழிலாளி காயம்

கூடலூர் : கூடலூர் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் சரகம் 1-பி தொழிலாளர் குடியிருப்புக்கு நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் வந்த காட்டு யானை, அங்கு வந்த லோகநாதன் என்பவரை விரட்டியுள்ளது. தப்பிக்க ஓடிய லோகநாதன், வீட்டின் அருகே தவறி விழுந்து காயமடைந்தார். அங்கு நள்ளிரவு 11.00 மணிவரை சுற்றி வந்த யானை, மரப்பாலம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. வாழை மரங்களையும், பனை மரத்தையும் நாசப்படுத்தியது. பட்டாசு வெடித் தும் யானை நகரவில்லை. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு அங்கிருந்து நகர்ந்த யானை, தனியார் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. தேவாலா வனவர் காந்தன் தலைமையில் வன ஊழியர்கள், யானையை டான் டீ தேயிலை தோட்டம் வழியாக குண்டம்புழா வனப்பகுதிக்கு விரட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை