மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி : பசுமைக்கு திரும்பிய வனப்பகுதிகளை தேடிவரும் வன விலங்குகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. நீலகிரியில் ஜூலை மாதம் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கனமழை பெய்தது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் வரத்து அதிகரித்து, நீர் நிலைகளில் வரத்து அதிகரித்தது. இதனால் வனப்பகுதிகள் தற்போது பசுமையாக காட்சியளிக்கின்றன. மேலும் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம் பெயர்ந்த வனவிலங்குகள் மீண்டும் மாவட்டத்தின் வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மாயார் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள காங்கிரஸ் மட்டம், பெல்மீன் கடவு, துல்கம்பட்டி, பாலமரத்துப்பட்டி, கல்லம்பாளையம், ஆடிகொம்பை, முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடி, புலி மற்றும் இதர விலங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. மேலும் யானைகள் சாலையோரங்களில் வலம் வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக பயணிக்க வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
03-Oct-2025