உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சில்வர் ஓக் மரங்கள் பறிமுதல்

சில்வர் ஓக் மரங்கள் பறிமுதல்

கூடலூர் : கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் தனியார் இடத்தில் அனுமதியில்லாமல் வெட்டப்பட்ட சில்வர் ஓக் மரங்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். கூடலூர் தொரப்பள்ளி பகுதியில் தனியார் இடத்தில் அனுமதியின்றி சில்வர்ஓக் மரம் வெட்டுவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் ஆர்.டி.ஓ., தனசேகரன் உத்தரவுப்படி, தாசில்தார் உதயகுமாரி, கிராம நிர்வாக அலுவலர் வேலாயுதம் ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்தனர். ஆய்வில் அப்பகுதியை சேர்ந்த ஜெயினுள் ஹாபிக் என்பவரின் பட்டா இடத்தில் அனுமதியின்றி 8 சில்வர் ஓக் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 8 அடி நீளமுள்ள 24 சில்வர் ஓக் மரத்துண்டு, விறகுகளையும் பறிமுதல் செய்தனர். 'இதுதொடர்பான அறிக்கை ஆர்.டி.ஓ., மூலமாக கலெக்டருக்கு அனுப்பப்படும். அவர் உத்தரவின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என தாசில்தார் உதயகுமாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை