உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளிக்கு தளவாட பொருட்கள்

அரசு பள்ளிக்கு தளவாட பொருட்கள்

பந்தலூர் : பந்தலூர் அருகே பிதர்காடு ஸ்டேட் வங்கி சார்பில், பிதர்காடு அரசு மேல்நிலை பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், வங்கி கள அலுவலர் குமார் வரவேற்றார். வங்கி மேலாளர் விக்டர்ஜோன் பேசுகையில், ''ஸ்டேட் வங்கி ஆண்டுதோறும் கல்விக்காக பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக வங்கியின் ஆண்டு லாபத்தில் ஒரு பங்கினை ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு செலவிட்டு வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான உதவிகள் செப்டம்பர் 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகிறது,'' என்றார். தொடர்ந்து பள்ளி அலுவலக தேவைக்கான 18 நாற்காலிகள், ஒரு டேபிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வங்கி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் ஜோஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை