உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஊட்டி : நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,) கூட்டம் குன்னூரில் நடந்தது.கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஆல்துரை பேசுகையில், ''அரசு டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பணிவரன்முறை, அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை சம்பளம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பு செய்யாமல் ஊதியத்தில் சிறு உயர்வை மட்டும் அறிவித்து இருப்பது ஊழியர்கள் மத்தியில் மன நிறைவை அளிக்கவில்லை,'' என்றார்.மாவட்ட பொது செயலாளர் மகேஷ் மாநில குழு முடிவுகளை விளக்கி பேசினார். ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி பகல் 12.30 மணி முதல் 2.00 மணி வரை கோரி­க்கை ஆர்ப்பாட்டம் நட­த்த தீர்மானிக்கப்பட்டது. தியாகராஜ், பாலசுப்ரமணியம், இரியன், காந்தி, ராமையா, சிவன், நாகராஜ், வசந்தா, நவீன், ஹரிபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ