மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி;ஊட்டியில் மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க கூட்டம் நடந்தது. விவசாயி ரவிக்குமார் வரவேற்றார். சங்க தலைவர் தும்பூர் போஜன் தலைமை வகித்தார். நிர்வாகி காரி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிப்பது; விரைவில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், அடுத்தக்கட்ட போராட்டம் அறிவிப்பது; மாவட்டத்தில் உள்ள கூட்டு பட்டா நிலங்களை தனிப்பட்டாவாக மாற்ற துறை அதிகாரிகளை வலியுறுத்துவது; விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு வரும் வன விலங்குகள் பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பன உட்பட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். சங்க நிர்வாகி மணி நன்றி கூறினார்.
03-Oct-2025