உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; மாவட்ட வன அலுவலர் தகவல்

நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; மாவட்ட வன அலுவலர் தகவல்

ஊட்டி; 'நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது,' என, மாவட்ட வன அலுவலர் தெரிவித்தனர். நீலகிரி வரையாடுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த, டாக்டர் டேவிதாரின் பிறந்தநாளான அக்., 7ம் தேதி வரையாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அழிவின் பிடியில் உள்ள வரையாடுகளை பாதுகாக்க, மாநில அரசு ஐந்தாண்டு திட்ட அடிப்படையில், 25.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திட்டத்தை செயல்படுத்திவருகிறது. நீலகிரி, கோவை மாவட்டத்தில் அதிகளவில் வரையாடுகள் வாழ்கின்றன. நடப்பாண்டு நடந்த கணக்கெடுப்பின் படி மாநிலத்தில், 1,303 வரையாடுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.இந்நிலையில், நீலகிரி வரையாடுகள் தினத்தை முன்னிட்டு, ஊட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தாவரவியல் பூங்காவில் வரையாடுகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. மாவட்ட வன அலுவலர் கவுதம் திறந்து வைத்து பார்வையிட்டார். வரையாடுகள் பாதுகாப்பது குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. கையெழுத்து இயக்கமும் நடந்தது. சுற்றுலாபயணிகளும் பங்கேற்றனர். மாவட்ட வன அலுவலர் கவுதம் நிருபர்களிடம் கூறுகையில், ''அழிவின் பிடியில் உள்ள வரையாடுகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. நம் மாவட்டத்தில், சோலை புல்வெளிகள் பரப்பு அதிகரித்து வருவதால், தற்போது வரையாடுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி