உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி சிறப்பு குழு வயநாடு பயணம்

நீலகிரி சிறப்பு குழு வயநாடு பயணம்

ஊட்டி : ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறுகையில்,''நீலகிரியில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிக்கப்படும் இடங்களை, 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில், அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள பொதுமக்களை இரவு நேரங்களில் முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் கண்காணிக்க, 42 மண்டல அளவிலான குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், வயநாட்டிற்கு சிறப்பு குழு செல்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !