உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மூத்தோர் தடகள போட்டியில் நீலகிரி வீரர்களுக்கு தங்கம்

 மூத்தோர் தடகள போட்டியில் நீலகிரி வீரர்களுக்கு தங்கம்

கோத்தகிரி: நீலகிரி மூத்தோர் தடகள வீரர்கள், தெற்கு ஆசியா தடகள போட்டியில் சாதித்து தங்கம் வென்றனர். நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், சென்னையில் நடந்த தெற்கு ஆசியா தடகள போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், குந்தா தாலுா மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த பிரபாகரன், 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், 10 கி.மீ., மினி மாரத்தான் போட்டியில் தங்கம் வென்றார். இதே போல, குப்புசாமி, 80, வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், நீளம் தாண்டுதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம், கோல் வால்ட் போட்டிகளில், மூன்று தங்கம் வென்று சாதித்தார். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தடகள வீரர்களுக்கு, மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி, செயலாளர் திவாகரன் உட்பட, சங்க நிர்வாகிகள், மாவட்ட விளையாட்டு ஆர்வலர்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை