உள்ளூர் செய்திகள்

பேரிடர் பயிற்சி

மஞ்சூர்:நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியை என்.சி.சி., அலுவலர் சுப்ரமணி, ஆசிரியர்கள் ரமேஷ், சத்யமூர்த்தி, ஆரி உள்ளிட்டோர் விளக்கி கூறினர். மேலும் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்ற சிக்கல்களிலிருந்து எவ்வாறு உயிர்களையும், உடைமைகளையும் காப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் லட்சுமணன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்