மேலும் செய்திகள்
பழங்குடியினர் கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு
3 hour(s) ago
கூடலுார்;கூடலுாரில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் முழுமையாக விரிவு படுத்தாத நிலையில், பயணிகள் அமர இருக்கைகள் வசதி இல்லாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கூடலுாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, 5.42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பணிமனையை பிப்.,25ம் தேதி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், நீலகிரி எம்.பி., ராஜா திறந்து வைத்தனர்.பஸ் ஸ்டாண்ட் ஒட்டிய பணிமனையை, புதிய பணிமனைக்கு மாற்றாமல், பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. தற்போது, இறுதிகட்ட பணிகள் நடந்து வந்தாலும் இதுவரை முழுமை பெறவில்லை. பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியை மட்டுமே பஸ் நிறுத்தி, பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஆறு பஸ்கள் நிறுத்த மட்டுமே இட வசதி உள்ளது.பயன்பாட்டில் உள்ள, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பயணிகள் குறிப்பாக பெண்கள், முதியவர்கள் காத்திருக்க இருக்கைகள் வசதியின்றி, கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பயணிகள் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் காரணமாக, பணிகள் முழுமையாக முடியாத நிலையில் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. பஸ்கள் நிறுத்த, போதிய இடவசதி இன்றி ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் குறிப்பாக பெண்கள் முதியவர்கள் தரையில் அமர்ந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகள் காத்திருக்க இருக்கைகள் அமைப்பதுடன், பணிமனையை மாற்றி பஸ் ஸ்டாண்ட் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'பணிமனை புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு, அப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.இப்பிரச்னைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்தனர்.
3 hour(s) ago