உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா; கூடலுாரில் சுய உதவி குழுவினர் அசத்தல்

ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா; கூடலுாரில் சுய உதவி குழுவினர் அசத்தல்

கூடலுார் : கூடலுாரில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா மற்றும் போட்டியில் சுய உதவி குழு பெண்கள் பாரம்பரிய உணவுகளை சமைத்து காட்சி படுத்தினர்.கூடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு உணவு திருவிழா, உணவு கண்காட்சி மற்றும் போட்டிகள் நடந்தது. விழாவை, கூடலுார் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், ஆறுமுகம், தலைவர் கீர்த்தனா ஆகியோர் துவக்கி வைத்து, சுய உதவிக் குழு பெண்கள் சமைத்து காட்சிப்படுத்திய பாரம்பரிய உணவை பார்வையிட்டனர்.அதில், முதல் மூன்று இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட, 'முதுமலை அனுகிரக, ஸ்ரீ மதுரை பிரண்ட்ஸ், முதுமலை சங்கமம்,' பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், வாழ்வாதார இயக்கத்தின் வட்டார மேலாளர் உஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ