கோடமலைக்கு பழைய பஸ் இயக்கம்; எஸ்டேட் மக்கள் அதிருப்தி எஸ்டேட் மக்கள் அதிருப்தி
குன்னுார், ; குன்னுார் கோடமலை எஸ்டேட்டுக்கு இயக்கப்பட்ட புதிய அரசு பஸ்சை, வேறு வழித்தடத்திற்கு மாற்றி, பழுதடைந்த பஸ்சை இயக்குவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.குன்னுாரில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் கோடமலை எஸ்டேட், சோலடா மட்டம் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சை நம்பி, கீழ் அட்டடி, மேல் அட்டடி, கோடமலை எஸ்டேட், சோலடாமட்டம் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு, சமீபத்தில் இயக்கிய புதிய அரசு பஸ்சை நிறுத்தி, மிகவும் பழமையான பஸ் இயக்கப்படுகிறது. மக்கள் கூறுகையில், 'அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட புதிய அரசு பஸ் சில நாட்கள் இயக்கப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக இந்த பஸ்சை கீழ்குந்தா- மேட்டுப்பாளையம் வழித்தடத்திற்கு அந்த பஸ் மாற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த பழுதடைந்த இந்த பஸ்சால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, கிராமத்திற்கு புதிய அரசு பஸ்சை இயக்க வேண்டும்,'என்றனர்.