மேலும் செய்திகள்
பள்ளிகளில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்
15-Jan-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி எம்.எஸ்.எஸ்., மெட்ரிக் பள்ளியின், 33வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் அன்வர் ஹம்சத் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்ற பேரணி நடந்தது. தொடர்ந்து, நடந்த நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் ருக்மணி வரவேற்றார். எம்.எல்.ஏ., ஜெயசீலன் விழாவை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, பள்ளி முதல்வர் கவிதா ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பள்ளி சேர்மன் ஆலி, நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, கவுன்சிலர்கள் ஸ்ரீகலா சுந்தர், முரளி, வியாபாரிகள் சங்க நிர்வாகி கணேசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் ஆகியோர், கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசினர்.தொடர்ந்து, கடந்த, 10 வகுப்பு பொது தேர்வில் முதல் இடம் பிடித்த மாணவர்கள், சிறு சேமிப்பு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் சந்தோஷ் நன்றி கூறினார்.
15-Jan-2025