மேலும் செய்திகள்
ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் மகோற்சவ விழா துவக்கம்
1 hour(s) ago
மீண்டும் மாட்டை கொன்ற புலி அச்சத்தில் உள்ளூர் மக்கள்
1 hour(s) ago
ஊராட்சி பெயரை மாற்ற கலெக்டரிடம் மனு
1 hour(s) ago
அன்னுார்:ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பஸ்சை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்லும் படி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.அன்னுாரில், கோவை சாலையில், ஒரு கி.மீ., தொலைவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம் மற்றும் 500 வீடுகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. இதுகுறித்து, சுக்ரமணி கவுண்டன்புதுார் உழவர் விவாத குழு அமைப்பாளர் ரங்கசாமி, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். இதை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் பிறப்பித்த உத்தரவில், 'கள ஆய்வில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, 500 குடியிருப்புகள் உள்ளன. அரசு அலுவலகங்கள் உள்ளன. எனவே இங்கு வேண்டுகோள் பஸ் நிறுத்தம் அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது' என அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு தெரிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், அன்னுார், மேட்டுப்பாளையம், கருமத்தம்பட்டி, கோவை உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வேண்டுகோள் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது. எனவே இந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டும்' என தெரிவித்துள்ளார்.மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள், பஸ் நிறுத்தத்தில் கள ஆய்வு செய்து நிறுத்தாத பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago