உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாவல் மரத்திலிருந்து விழுந்த பெயின்டர் மரணம்

நாவல் மரத்திலிருந்து விழுந்த பெயின்டர் மரணம்

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, நாவல் பழம் பறித்த பெயின்டர் மரத்திலிருந்து விழுந்து மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.கோத்தகிரி அரவேனு தவிட்டுமேடு மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்,35. பெயின்டர் வேலை செய்து வந்த இவர், கர்ப்பமான தனது மனைவியை பரிசோதனைக்காக ஊட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.குன்னுார் அளக்கரை சாலையில் திரும்பி வரும்போது, தனியார் தேயிலை தோட்டத்தில் காய்த்து குலுங்கிய நாவல் பழங்களை பறித்து இறங்கும் போது மரத்திலிருந்து தவறி பாறையில் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த, செந்தில்குமாரை, அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !