வழி மாறிய பயணிகள்
குன்னுார்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இன்று (நவ.,10) குன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி கூகுள் மேப் உதவியுடன் தங்களது பைக்கில் புறப்பட்டனர். புதுக்காடு பகுதிக்கு சென்ற போது, அங்கு பணியில் இருந்த வனத்துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி, இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள விவரத்தை தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் மீண்டும் குன்னுார் வழியாக சென்றனர்.