உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முன்பதிவு செய்வதில் குளறுபடி; இறக்கி விடப்பட்ட பயணிகள்

முன்பதிவு செய்வதில் குளறுபடி; இறக்கி விடப்பட்ட பயணிகள்

பந்தலுார்:கூடலுார் பகுதியை சேர்ந்தவர் திருக்கேஸ்வரன். காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி புரிகிறார். அவரது மனைவி ஜெயந்தி மற்றும் மகன் ஹேமந்த் ஆகியோர் திருச்சி சென்றுள்ளனர். அங்கிருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு திருச்சியில் இருந்து, கூடலுார் புறப்படும் அரசு பஸ்சில் பயணிப்பதற்காக, 3ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அப்போது, 12,13 என்ற எண்களுக்கு டிக்கெட் கட்டணம், 644 ரூபாய் கட்டணம் 'ஆன்லைனில்' செலுத்தப்பட்டது.தொடர்ந்து, 3ம் தேதி இரவு பஸ்சில் ஏறி தங்களுக்கு பதிவு செய்த இருக்கையில் இருவரும் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த நடத்துனர் சுப்ரமணியம் என்பவர் அந்த சீட், வேறு ஒருவருக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இவர்கள் இருவரும் தங்கள் முன்பதிவு செய்தது காட்டியும் நடத்துனர் ஏற்று கொள்ளவில்லை. கூடலூர் செல்ல வேண்டிய இருவரையும் கட்டாயப்படுத்தி பஸ்சில் இருந்து இறங்கி விட்டுள்ளமார்.இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், திருப்பூர் பகுதிக்கு பஸ் ஏறி வந்து, அங்கிருந்து கூடலுார் வந்து சேர்ந்துள்ளனர். நேற்று, ஜெயந்தி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கிளை மேலாளர் அருள் கண்ணன் கூறுகையில், ''இவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளது உறுதி செய்யப்படவில்லை. எனினும் இவர்களின் பணம் மூன்று நாட்களில் திருப்ப வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். அதில், ஏற்பட்ட தவறுக்கும் அரசு போக்குவரத்து கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ