உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் பெயர்ந்த ஜல்லி கற்கள் நடப்பதற்கு கூட சிரமப்படும் மக்கள்

சாலையில் பெயர்ந்த ஜல்லி கற்கள் நடப்பதற்கு கூட சிரமப்படும் மக்கள்

பந்தலுார், ;பந்தலுார் அருகே, பந்தபிலா பகுதியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் சாலை உள்ளது. பந்தலுார் அருகே, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பந்தபிலா அமைந்துள்ளது. இப்பகுதியில் இருந்து, குன்றில்கடவு செல்லும்,1 கி.மீ., துாரமுள்ள மண் சாலையை தார் சாலையாக சீரமைத்து தர இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர். அதனையடுத்து, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, 'விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்படும்,' என, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்தனர். ஊராட்சி மூலம், 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் சோளிங் சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் அதிகாரிகளின் மெத்தனத்தால், தற்போது சாலை முழுவதும் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் காணப்படுகிறது. இப்பகுதி குடியிருப்புகளுக்கு மிகவும் தாழ்வான சாலையில் செல்ல வேண்டிய சூழலில், இன்னும் சில நாட்களில் பருவமழை துவங்கும் நிலையில், பெயர்ந்து காணப்படும் ஜல்லி கற்கள் அனைத்தும், இங்குள்ள தேயிலை தோட்டங்களுக்குள், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். இந்நிலையில், சாலையும் முழுமையாக பெயர்ந்து, தேயிலை மற்றும் காபி விவசாயிகளும் தோட்டங்களை சீரமைப்பதில் பெரும் சிரமப்படும் சூழல் உருவாகும். எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து சாலையை விரைவாகவும், முழுமையாகவும் சீரமைத்து தர முன்வர வேண்டியது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ