மேலும் செய்திகள்
துாசூரில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தீவிரம்
31-Mar-2025
கூடலுார் : 'கூடலுார் ஆமைகுளம் வழியாக, கத்தரித்தோடு செல்லும் சாலையில் ஆற்றின் குறுக்கே, 4 அடி அகலத்தில் பாலம் அமைத்தால் எந்த பயனும் இல்லை,' என, கூறி மக்கள் பணியை நிறுத்தினர்.கூடலுார் கோழிக்கோடு சாலை ஆமைக்குளம், அரசு கல்லுாரி வழியாக கத்தரித்தோடு பகுதிக்கு சாலை பிரிந்து செல்கிறது. மரத்தில் தற்காலிக பாலம் அமைத்தும், தண்ணீரில் நடந்தும் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர்.அப்பகுதியில் நிரந்தர பாலம் அமைக்க நெல்லியாளம் நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. வனத்துறை அனுமதி கிடைக்காததால் பணிகள் துவக்கப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், வனத்துறை சார்பில் பாலம் அமைத்து தருவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து ஆற்றின் குறுக்கே,4 அடி அகலத்தில், பாலம் அமைக்க வனத்துறையினர், 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர்.இதற்கான, பணிகளை துவங்க ஒப்பந்ததாரர் பூஜை செய்ய வந்தனர். தகவல் அறிந்து வந்த மக்கள், வாகனங்கள் சென்று வரும் அகலத்தில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க, வலியுறுத்தினர். அதனை வனத்துறையின் ஏற்காததால், மக்கள் பணியை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சி தலைவர் சிவகாமி, துணை தலைவர் நாகராஜ், கவுன்சிலர் புவனேஸ்வரன், எஸ்.எஸ்.ஐ.,கள் பெல்லி, தினேஷ்குமார் பிரச்னை குறித்து மக்களிடம் கேட்டறிந்தனர்.மக்கள் கூறுகையில், 'ஆற்றின் குறுக்கே, நான்கு அடி அகலத்தில் வனத்துறையினர் பாலம் அமைப்பதால் எந்த பயனும் இல்லை. சிறிய வாகனங்கள் சென்று வரும் அகலத்தில் பாலம் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர். ஆனால், வன ஊழியர்கள் அதனை ஏற்கவில்லை. இதனால், பாலம் கட்டும் பணியை துவங்க கூடாது' என, மக்கள் தெரிவித்தனர்.'இப்பிரச்னை தொடர்பாக, கலெக்டர் மற்றும் வன அதிகாரிகளுடன் பேசி, தீர்வு காணப்படும்' என, நெல்லியாளம் நகராட்சி தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
31-Mar-2025