ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
ஊட்டி; சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடை பெறுவதையொட்டி, ஊட்டியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. நீலகிரியில் சுதந்திர தின விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமும், நடக்காமல் இருக்க, கோவை மாவட்டத்தில் இருந்து, 30 பேர் கொண்ட அதிவிரைவு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இருந்து, எஸ்.பி., நிஷா தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர். அணிவகுப்பு நிகழ்ச்சி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு வழியாக மத்திய பஸ் ஸ்டாண்ட் வழியாக காந்தள் வரை சென்றது. நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.