மேலும் செய்திகள்
சேதமடைந்த நிழற்குடை; பயணிகளுக்கு பாதிப்பு
28-Nov-2024
கோத்தகிரி; கோத்தகிரி ராம்சந்த் சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி ராம்சந்த் பகுதியில், நுாலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மின்துறை அலுவலகம், பாலிடெக்னிக் கல்லுாரி உட்பட, அரசு அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன.தவிர, பிரசித்தி பெற்ற சக்தி மலை முருகன் கோவில், கடைகள் உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதனால், இச்சாலையில், மக்கள் நடுமட்டம் அதிகரித்து காணப்படுகிறது.இச்சாலையில், பழைய நுாலகம், புதிய நுாலகம் இடையே, சாலை சேதமடைந்து, பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, மழை பெய்து வருவதால், குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், நெரிசல் மிகுந்த இச்சாலையில் ஏற்பட்டுள்ள குழிகளை சமன் செய்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
28-Nov-2024