உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்; காட்டு யானைகள் பலியாகும் அபாயம்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்; காட்டு யானைகள் பலியாகும் அபாயம்

பந்தலுார், : பந்தலுார் பகுதியில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் காட்டு யானைகள் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.ஒரு யானை தன் வாழ்நாளில் வன வளத்தை அதிகரித்து, பிற உயிரினங்கள் உயிர் வாழ காரணமாக உள்ளது. ஆனால், அதன் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், மின் வேலிகளில் சிக்கி யானைகள் பலியாவதை பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.இந்நிலையில், பந்தலுார் பகுதியில் யானை வழித்தடங்களை உள்ளடக்கிய தோட்ட பகுதியில், விவசாய பயிர்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க, சோலார் மின்வேலி அமைத்துள்ளனர். இதனால் வழிமாறும் யானைகள் குடியிருப்பு பகுதிகள், தோட்டங்கள் வழியாக செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அப்போது, பல்வேறு பகுதிகளிலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளில் உடல் உரசி 'ஷாக்' அடித்து பலியாகும் பரிதாபம் ஏற்படுகிறது. தொடரும் இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க மின்வாரியம், வனத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை