மேலும் செய்திகள்
குரங்குகளால் பாதிக்கப்படும் குடியிருப்பு வாசிகள்
19-Aug-2024
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் மட்டுமே இருந்த யானைகள், சமீப காலமாக குடியிருப்பு பகுதிகள், விவசாய தோட்டங்கள், நகரப் பகுதிகளில் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனால் மக்கள் மத்தியில் யானைகள் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து, பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் கோட்ட மேலாளர் அலுவலகத்தை ஒட்டிய புல்வெளியில், முகாமிட்டிருந்த யானை கூட்டத்தில், மூன்று குட்டிகளின் சுட்டித் தனமான சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்கச் செய்தது.குட்டி யானைகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி, முட்டி தள்ளுவது, கீழே தள்ளி முட்டுவது பின்னர் ஓடிச்சென்று தங்களின் தாயாரின் அரவணைப்பில் மறைந்து கொள்வது என சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த யானை குட்டிகள் மூன்றும் சுட்டித்தனமான விளையாட்டில் ஈடுபட்டது. இந்த காட்சிகளை இந்த வழியாக வந்து செல்பவர்கள் நீண்ட நேரம் பார்த்து ரசித்து சென்றனர். என்னதான் யானைகள் மீதான வெறுப்புணர்வு ஏற்பட்ட போதும், யானைகளை பார்த்து ரசிப்பதிலும், அவற்றின் சேட்டைகளை ரசிப்பதிலும் மக்கள் தவறுவதில்லை என்பதையே இது வெளிக்காட்டி உள்ளது. யானைகள் உணவுக்காகவே வனத்தை விட்டு வெளியேறுவதாக கூறினாலும், வனப்பகுதிகளை ஒட்டி மனிதர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டடங்களின் அதிகரிப்பால் தான் இவை வழி மாறி வருகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டால் யானைகள் மீதான வெறுப்புணர்வு குறையும்.
19-Aug-2024