மேலும் செய்திகள்
தாவரவியல் பூங்காவில் மலர்ந்த 'டிசம்பர் பூக்கள்'
28-Dec-2024
ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில், நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளை பனி பாதிப்பில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மலர் கண்காட்சிக்காக பூங்காவில் இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை , மலர் மாடங்களில், 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தி காட்சிப்படுத்துவது வழக்கம். நடப்பாண்டு கோடை சீசனுக்கான பணிகள் துவக்கப்பட்ட நிலையில், மலர் கண்காட்சிக்காக விதை சேகரிப்பு பணிகள் முடிந்தன.தற்போது, 'பென்சீனியம்,மேரிகோல்டு, பெட்டூனியம் மற்றும் சால்வியா,' உட்பட பல்வேறு மலர் நாற்றுகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டியில் உறைப்பனி பொழிவு நிலவி வருகிறது. பனியில் இருந்து மலர் நாற்றுகளை பாதுகாக்கும் வகையில், 'கோத்தகிரி மலார்' என்ற செடிகளை மூடி பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலை உதவி இயக்குனர் பீபிதா கூறுகையில்,''அரசு தாவரவியல் பூங்காவில், 2025ம் ஆண்டு மே மாதம் நடக்க உள்ள மலர் கண்காட்சிக்காக, பூங்காவை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நாற்று உற்பத்தி செய்யப்பட்டு, தொட்டிகளில் நடவு பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. தற்போது உறைபனி காலம் நிலவி வருவதால், நாற்றுகளை பாதுகாக்க 'கோத்தகிரி மலார்' செடிகளை கொண்டு பாதுகாப்பு பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.
28-Dec-2024